நெத்தி முத்தம் (short film script)

 

நெத்தி முத்தம்..



(பொறுப்பு துறப்பு: இந்த கதையை படிக்கும் போது சிலருக்கு அசவுகரியமான உணர்வு ஏற்படலாம்)

ஒரு நாள் சாயங்காலம் கோயம்பேடு பஸ் ஸ்டான்டு! வருவதும், போவதுமாய் இருந்த பேருந்துக் கூட்டம். அங்கும், இங்கும் கசகசவென்று மொய்க்கும் ஈக்கள் போல மக்கள் கூட்டம். அவர்களுள் சில கிராமத்து பெரியோர்கள் கிடைத்த இடத்தில் தூங்கிக் கொண்டிருக்க, ஒன்று ரெண்டு குடிகாரர்கள் பாட்டு பாடியும், கதை சொல்லியும் புலம்பிக் கொண்டிருக்க, சிலர் ஒரே இடத்தில் வெகு நேரமாய் யாரையோ எதிர்பார்த்து காத்துக் கொண்டு இருந்தார்கள்.

இவர்களுக்கெல்லாம் மத்தியில் கிண்டி பஸ் வந்து நிற்க்கின்ற இடத்தில். வேல முடிச்சி சொக்கிப்போன கண்ணோட, ஹெட்செட்’ல ‘கொத்தால் சாவடி லேடி நீ கோயம்பேடு வாடி நு’ பாட்டு கேட்டுட்கிட்டு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.

திடீர்னு தெரியாத ஒரு நம்பர்ல இருந்து வந்த ஒரு ஃபோன், ஓடிகிட்ட இருந்த பாட்ட நிறுத்துச்சி, கொஞ்ச நேர யோசனைக்கு அப்ரம் பொருமையா அட்டன் பண்ணி, “சொல்லுங்க யாரு….?” அப்டினு கேட்டேன். தம்பி, நா கலியபெருமாள் அண்ணன் பேசறன் பா அம்மாட்ட பேசியிருந்தன், எடுத்ததுக்கெல்லாம் உங்கொம்மா லூசு மாதிரி தெருவுல எறங்கி கத்துது என்ற வார்த்தைகளை கேட்கையில், என்னவாம் இந்த ஆளுக்கு  என்ற கோவம் எனக்குள் எட்டி பார்த்தது.

சுமூகமாக போக வேண்டும் என்பதற்காக, எண்ணாச்சு ணே? என்ற மெல்லிய குறளில் கேட்டேன். அவரோ உனுக்கே தெரியும், ஏற்கனவே டேட் முடிஞ்சி மூணு மாசத்துக்கு மேல போயிட்டு இருக்கு. ஆனா, மீதி 14,000 பாக்கி அப்டியே நிக்கிது. அத கேட்டா நா உங்களுக்குலாம் ஆவாதவனா போயிட்றன். நீ என்ன பண்ற, சம்பளம் போட்ட ஒடனே கூட ஒரு 3,000 போட்டு 17000’மா எனக்கு போட்டு விட்று“ என அடுக்கடுக்காய் வார்த்தைகளை கொட்டினார்.

அவர் பேசிக் கொண்டிருக்கும் போதே,  ‘வாங்குன 50 ஆயிரத்துக்கு 10 ஆயிரம் எக்ஸ்ட்ரா வட்டிய தான இப்போ கட்டிட்டு இருக்கோம் என்றெல்லாம் எண்ணிய எனக்கு, வாயிலிருந்து வார்த்தையே வரவில்லை. என்னிடம் இருந்து பதில் வருவதற்கு முன்பே, ரெண்டு சின்ன புள்ளைங்க இருக்கானுங்க நு உங்கள நம்பி தானபா உங்கொம்மாகிட்டலாம் காசு கொடுத்த என்றார். மிக வேகமாக பேசிக் கொண்டிருந்தவரிடம், ‘அண்ணே வட்டி அதிகமா போயிட்டு இருக்குணே என்றேன்.’

ஏப்பா எது அதிகம், போய் மத்த வட்டிகாரனுங்குள பாரு! இவ்ளோ ஏன் இதுவே, வேற ஒரு ஆளா இருந்தா 7,000 போட்டிருப்ப நானு, செரி நம்ப வீடுனு சொல்லி தான் 3,000 போதும்னு நிறுத்திட்டன் என எங்களை பற்றின அவரது கவலையை எடுத்து கூறினார். எங்களால முடியல ணா இதுக்கு மேலயும் வட்டிய கட்டிடு இருக்க முடியாது, பேலன்ஸ் காச மட்டும் வாங்கிக்கிட்டு விட்ருங்க எங்கள, என்று கெஞ்சி தலை வலியை முடித்துக் கொள்ளலாம் என நினைத்தேன்.

அவரோ, அதெப்டி! அதெப்டி விட்ருங்கனு சொல்ற, இப்டியே விட்டுகிட்டு போனா  தொழில் என்னாவரது, இல்ல நீ தொழில் பண்ணா இப்டி தான் நஷ்டத்துல விடுவியா? என்ற அவரின் கேள்விக்கு. நஷ்டம்லாம் ஒன்னும் இல்லணா ஆல்ரெடி அசல்’கு மேல தான கட்டிட்டு வரோம், ரொம்ப கஷ்ட்டத்துல போயிட்டு இருக்கு ணா என்றேன்.

எல்லாருக்கும் தான் பா இருக்கு கஷ்டம்! நாளைக்கு ஒரு நக லோன் கட்டனும் நானு, கட்டாட்டி செருப்பால அடிப்பான் என்னைய என்ற அவரின் பஞ்சப்பாட்டை கேட்க விரும்பாத நான். இன்னா ணா 20 ஆயிரத்துக்கு மேல வட்டி மட்டுமே கட்டிட்டு இருக்கோம், ஒரு நியாயம் வேணாமா என கத்த தொடங்கிவிட்டேன். 

ஏண்டா உங்களுக்குலாம் காசு வாங்கும் போது இனிக்கிது, திருப்பி குடுக்கும்போது கசக்குது ல என அவர் திருப்பி பேசிக்கொண்டிருக்கையில் சுற்றி இருந்தவர்கள் எல்லோரது கவனமும் என் மீது இருந்ததை சுதாரித்த நான் ஒரு ஓரத்தில் போய் நின்று “ணா இதுக்குமேலலாம் ஒரு ரூவா வட்டி கட்ட மாட்டன், நீங்க ரெகுளரா இப்டி வீட்டுக்கு போய் அம்மாவ தொல்ல கொடுத்துட்டு இருந்தீங்க, ஸ்டேஷன் போக வேண்டி இருக்கும் என்று கோபமாய் சொன்னேன்”

ஹா.. போ, போ படிச்ச முட்டாள் னு நிரூபிக்காத, ஸ்டேஷன் போய் இந்த கதைய போலிஸ்கார கிட்ட சொல்லு காரி உன் மூஞ்சி மேல துப்பி அனுப்புவான் என்ற அவரிடம்.  “துப்புட்டும், துப்புனா தொடச்சிட்டு வருவனே தவற, உனுக்கு ஒரு ரூபா கட்ட மாட்ட, நீ என்ன ஆட்றியோ ஆட்டிக்கோ என்று கூறி அந்த அழைப்பை துண்டித்து விட்டேன்.”
 
இவ்வளவு வேகமாக இதுவரை யாரிடமும் பேசியதில்லை என்பதால் உடம்பெல்லாம் வியர்வையும்,  காலில் நடுக்கமும் தாமாக வந்து ஒட்டிக் கொண்டது. அந்த பதைபதைப்போடு, ஸ்ஸ்சபா…. ஒரே தொல்ல மைறா இருக்கு என்று கூறியபடி அங்கே இருந்த சிமெண்ட் பெஞ்ச்சில் அமர்ந்தேன்.

அந்த பெஞ்ச்சோட இன்னொரு மூளையில் யாரோ ஒருத்தி நீல கலர் பொடவ கருப்பு பிலவுஸ் கைல ஹான்ட்பேக்கோட இருந்தாள், என்ன ஸ்சென்ட்டுனு தெரியல ஸ்மெல்லு மட்டும் மூக்க தொலச்சது, பாதி இருட்டுல அவங்க மூஞ்சி கூட சரியா தெரியல. அவங்களை காணாமல் காலை ஆட்டிக்கொண்டு உட்கார்ந்து இருந்தேன். பஸ் ஸ்டான்ட் இது ஊருக்கே கேக்ற மாறி ஃபோன் ல காத்தினு இருக்க என்று பேச்சை கொடுக்க ஆரம்பித்தாள்.

என்னிடம் பேச தொடங்கியதும், ஒரு வேல இவங்க அந்த மாரி ஆளா இருப்பாங்களோ என்று யோசிக்க தொடங்கியது என் மனம். அதே சமயத்தில் ‘ஒன்னும் இல்ல கா என்று எனது வாயில் பதில் வந்தது, ஆனால் கால் அங்கிருந்து எந்திரிக்கவில்லை.’

நகராமலும், யோசனையிலும் அங்கேயே அமர்ந்திருந்த என்னிடம், கஸ்டத்துல  இருக்க போல ஆயிரத்து ஐநூறுவா ஆகும் என்றாள். நானோ கலியபெருமாளிடம் பேசிய அதே துணிச்சலுடன் அதுலாம் ரொம்ப அதிகம் ஆயிரம் ரூபா வாங்கிக்கோங்க என்றேன்.

அதற்கு ஒப்புக்கொண்ட அவளிடம் அடுத்து ரூம்லாம் எங்க என கேட்டதும், இப்டியே இந்த ரோட்ல நடந்து போ வரன் என்றாள். நடந்து போய்க்கொண்டிருந்த போது, கடன் தொல்ல அடுத்தென்ன என்று ஏதேதோ எல்லாம் யோசித்தேன். கூடவே மொத வாட்டி பன்னும் போது எப்படி இருக்கும்? இந்த இடத்துல தொடங்கி, அப்டி இப்டி பண்ணி, அந்த எடத்துல போய் முடிக்கனும் என்பது போன்ற எண்ணங்களும் எனக்குள் ஓடிக் கொண்டிருந்தன. 

ஆட்டோவில் வந்த அவள், டேய் வந்து ஏறு என்றவுடன்தான் முகத்தை முழுமையாக பார்த்தேன் 30, 35 வயசிருக்கும் முதிர்ந்த வட்ட முகம். ஆட்டோவில் ஏறியவுடன் என்னிடம் இருந்த அனைத்து துணிச்சலும் பறந்து பயமும், ஏதோ ஒரு கவலையும் வந்து பற்றிக்கொண்டது.

சரி, வந்துட்டோம் முடிச்சிட்டு போவ போறோம் இப்போ என்ன என்று என்னை தேத்திக் கொண்ட நான். அப்படியே அவளை பார்த்தேன் ஏதோ ஒரு சிந்தனையில் அவளும் இருந்தாள். நான் பார்ப்பதை கவனித்தவள் செரி காசு கொடு என்றாள் பொருமையா வாங்கிக்கோங்கனு சொல்லும்போதே குட்றா என்றாள். பேசியபடி, ஆயிரத்தை கொடுத்துவிட்டேன். ஆட்டோ பக்கத்தில் இருக்கும் ஒரு லாட்ஜ்’க்கு போய் நின்றது.

ஆட்டோக்கு காசு குடுப்பா என்றாள், எவ்ளோ ணா என கேட்டதும் 200 ரூபா டா என்றார் ஆட்டோக்காரர். இன்னா ணா அர கிலோமீட்டர் கூட வரல அதுக்கு போய் இவ்ளோ கேக்குறீங்க என்றேன், டேய் குட்றா இங்கலாம் சவாரி அப்டி தான் இருக்கும். குடுத்துட்டு மேல போ வரன் என்றாள் அவள். ஆட்டோக்காரர் மேலும் கீழும் பார்த்தார் உடனே 200 கொடுத்து விட்டு அங்கிருந்து சென்றேன்.

லாட்ஜ் ரிசப்ஷன் ல இருந்தவங்க என்னப்பா என்று கேட்டார்கள், அதோ அவங்க கூட வந்தேன் என்று கையை காட்டினேன். அவளோ ஆட்டோக்காரரிடம் என்னவோ பேசிக்கொண்டிருந்தாள். 1000 ரூபா குடுப்பா என்று ரிசப்ஷன் ஆளு கேட்கையில் என்னடா இது இவ்ளோ காசு ஆவுது என்று கடுப்பாகி அங்கேயே எதுவும் பேசாமல் நின்றேன்.

குடுத்துட்டியா டா போலாமா என்று கேட்டபடி வந்த அவளிடம். இதுலாம் நீங்க ஏன் சொல்லல, ஆயிர ரூபா தான் ஆகும்னு நினைச்சேன் இங்க வந்தா இவ்ளோ ஆகுது என கேட்டேன். தல வலியா போச்சி டா உன்னாண்ட வேற யார்கூட ணா போய் இருந்தா இந்நேரம் மூவாயிரம் எடுத்திருப்ப, இல்ல நான் என்ன ஒம்போது நு நினைச்சியா 300, 500 குடுத்துட்டு போட்டுடு போறதுக்கு.

அங்கிருந்த மூவர் முன் அசிங்கப்பட விரும்பாத நான். ஆயிரம் ரூவா குடுத்துட்டு விருவிருவென மேலே சென்றேன். வந்ததும் ரூம் ல எங்கனா கேமரா இருக்கா என்று தேடியது என் கண்கள். இல்லை என்று பார்வையோடு உறுதிபடுத்திய நான் பாத்ரூம் சென்று பார்தேன் டஸ்ட்பின் முதல் ஆங்காங்கே காண்டக் குவியல்.

உடனே அங்கிருந்து வெளியே வந்து மெத்தையில் உட்கார்ந்தபடியே சூத்தாம்பட்டையை வைத்து குதித்து பார்த்தேன். மருபடியும் ஃபோன் வந்தது இந்த முறை தம்பி, ‘அந்த ஆள் உனக்கு கால் பண்ணானா டா என்று கேட்டான்’. ஆமாட திரும்ப ஒரு வட்டி கேக்குறான், இதுக்குமேலலாம் ஒரு மயிரும் கிடையாது நு கத்திட்டு ஃபோன வெச்சிட்டன் என்றெல்லாம் நடந்ததை சொன்னேன்.

இன்னா தாண்டா வேணும் அவனுக்கு என்று அவனும் கத்தினான், டேய் நீங்க யாரும் இனி அவனுக்கு நயா பைசா கட்டாதீங்க நான் பாத்துக்றன். அவன் இன்னா பண்றானோ பண்ணட்டும், கோத்தா ஸ்டேஷன்லாம் போனா அவன் போட்ற வட்டிக்கு செருப்பால அடிப்பாங்க அவன. பர்மிட் வாங்காம வட்டிக்கு உட்ற நாயிக்கு அவ்ளோ திமிறா போச்சி என்றெல்லாம் பேசிக்கொண்டோம்.

அப்போது மேலே வந்த அவளை கண்டவுடன், செரிடா நா அப்றமா பண்றன், பாத்துக்லாம் என்று கூறி ஃபோனை வைத்துவிட்டேன். கிட்ட வந்து ஏய் இன்னா எங்க போனாலும் கத்தறது தான் உனக்கு வேலையா என்று கேட்டாள்.

இல்ல கா நார்மலா தான் பேசிட்டு இருந்த. நல்லா பேசுன என்றபடி தாழ்பாளை அடைத்தாள், அவள் மெத்தையில் உட்கார்ந்ததும் நான் எழுந்து நின்றுவிட்டேன்.  அந்த டியூப் லைட்ட ஆஃப் பண்ணிட்டு மூனாவது சுச்ச போடுடா என்றாள்.  சற்று பதட்டத்தில் இருந்த நான் அவள் சொன்னபடியே செய்தேன் சிவப்பு நிற டிம் லைட் ஒன்று ஆன் ஆனது.

ஹான்ட்பேகை திறந்து ஆணுரையை வெளியே எடுத்த அவள், சட்டைய மேல தூக்குடா என்றாள். அதை மாட்டி விட்ட படியே, இவ்ளோ பெருசா வெச்சிகிட்டு எங்க பாத்தாலும் நின்னு கத்தினு இருக்கான் லூசாட்டம் என்று முனுமுனுத்தாள்.

முனுமுனுப்புக்கு பதில் கூறி அவளையே குத்திக்காட்ட நினைத்த நான், ஆயிரத்தெட்டு பிரச்சனங்க எனக்கு, பாக்குற எல்லாரும் என்ன ஏமாத்துறாங்க என்றேன். ஹா அப்டி தான் ஏமாத்துவாங்க என்று சிலுத்துகொண்டு அப்படியே படுத்து பாவாடையை தூக்கி வந்து பண்ணு என்றாள்.

மெத்தையில் கிடந்த அவளை அப்படி கண்டவுடன் எனது எண்ணக் கனவெல்லாம் கலைந்தது. திடீரென்று ஏதோ மாதிரி ஆகிவிட்டது, வேண்டாம் எனவும் தோன்றியது. உடனே இல்ல வேணாம் நீங்க துணிய கீழ இறக்குங்க என்றேன்.

வேணாமா? என்ன சொல்ற? அப்போ நான் வரவா அப்போ என்றெல்லாம் கூறியபடி ஆச்சரியப்பட்டாள். இருங்க போவாதீங்க எனக்கு ஒரு மாதிரி கஷ்டமா இருக்கு, காசு வாங்குனீங்க ல கொஞச நேரம் பேசிட்டாவது போஙக என்றேன்.

பேசுறதுக்கா வந்த நானு இங்க, உனக்கு பேசனும் ணா பஸ் ஸ்டான்ட் லே ஒக்காந்து பேசி இருக்கலாம் ல,  10 நிமிஷம் தான் இருப்ப அதுக்கு மேல முடியாது என்றாள். பக்கத்தில் படுத்து கொண்டு அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த எனக்கு அவசரப்பட்டு வேணாம் சொல்லிட்டமோ என்று தோன்றியது.

அடுத்ததாக கடன் தொல்லையா உனக்கு, எவ்ளோ கட்டனும்னு கேட்டாள். அவளது காது ஜிமிக்கியில் மூக்கை உரசி நிறைய கட்டணும் என்று சினுங்கியவாரு பதில் சொன்னேன். 

சட்டென என்னை விவரிக்க முடியாத ஒரு பார்வையில் பார்த்த அவள், அருகே இருந்த தலையணையில் தள்ளி, தலை முடிக்குள் கையை விட்டு கோதியவாரு,  “சொல்றா ஒரு 5 லட்சம் இருக்குமா என்றாள். இருக்குர எல்லாத்தையும் சேர்த்தா ஒரு 2 லட்சம் வரும்க என்றேன்.

அப்போ என்னவிட கம்மியா தான் வெச்சிருக்க என்று சொல்லி, தலை கோதியதை நிறுத்திவிட்டு. சரி என்ன ஜாக்கெட் வேனும் நா கலட்டவா 500 எக்ஸ்ட்ரா ஆவும் என்றாள். வெறுப்பாகிய நான் அடப்போங்க எல்லா காசையும் புடுங்கிக்கிட்டீங்க சம்பள தேதி வர இன்னும் அஞ்சி நாளு இருக்கு, அதுவரைக்கும் எப்டி சாப்பட்றது நு தெரியல என்றேன்.

சும்மா சொல்லாத பர்ஸ்ல வெச்சி இருப்ப என்று கூறி பாக்கெட்டில் கை விட்டு எடுத்து அதை சோதித்து பார்த்தாள். என்ன 30 ரூபா தான் இருக்கு வேற எங்கனா மரச்சி  வச்சி இருப்ப என்று சொன்னாள்.

அட இல்லங்க நிஜமா என்றேன். ஜாக்கெட்டுக்குள் கைவிட்டு 200 ரூபாவை எடுத்து அவ்ளோதான் போ என்று சொல்லி எனது பர்சில் வைத்தாள். சரி அப்ரம் என்ன நான்  வர என்று சொல்லி கிலம்பினாள்

இன்னும் கொஞ்ச நேரம் இருங்க எனக்கு ஏதோ ஏமாந்த மாதிரி இருக்கு நான் பன்றேன் வந்து படுங்க என்றேன். வேகமாய் கிட்டே வந்தவளோ நெத்தியின் மையத்தில் 10 நொடிக்கு மிகாமல் ஒரு முத்தமிட்ட்டாள். 5வது நொடிக்கு மேல் இருக்க கண்ணை மூடிக்கொண்ட நான். பின்னர் முத்தம் நின்ற 5வது நொடியில் கண்ணை திறந்தேன். டேய் தாளாட்டா பாடுறேன் கண்ண மூடினு இருக்க, கொஞ்ச நேரம் வேணும் நா ரெஸ்ட் எடுத்துட்டு போ கீழ சொல்லிட்டு போறன் எனக்கு வேல இருக்கு என்று கூறி கதவை திறந்து மறைந்தாள்.

இவ்வளவு பெரிய அன்பை கொடுத்து சென்றவள் ஒரு வேலை தெய்வமாக இருப்பாளோ என நினைக்கையில், தூக்கு கீக்கு மாட்டிகிட்டு என்னைய மாட்டி விட்ற போரடா என்று ஜன்னல் வழியாக கூறிவிட்டு நடந்து சென்றாள். 

அவள் போன பிறகும் அங்கேயே அமர்ந்து கொண்டு ஏதேதோ யோசிக்க... இடத்தின் அசௌகரியமும், சற்று பயமும் வந்தது, உடனே கிளம்புவோம் என்று வெளியே வந்து பார்த்தால், உடம்பெல்லாம் குபீரென்று அடிக்கும் போதை நாற்றத்துடன் ஒருவன் மேலே ஏறி வந்தான், அவனைக் கண்டு ஒதுங்கி மூக்கை பொத்திக்கொண்டு போனேன், படியில் இறங்கும்போது மேலே ஏறிய அவளோ, என்ன கிளம்பிட்டியா என சொல்லி மிக நெருக்கமாக என்னை ஒறு முறை உரசிவிட்டு சென்றாள்.










 




கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Dark Web (YouTube Video Script)

அவனும் அவர்களும்

கவிதைகள்