Karur Tragedy
அது ஓர் சனி இரவு,
கரூரின் கருமேக வானத்தின் கீழ்,
ஓர் அரசியல் கூட்டம்...
அழியாத ரணங்களுக்கு காரணமானது!
வாழ்வில் நெரிசலை கொண்டவர்கள்
அரசியல்பட வந்தார்களோ! சினி நட்சத்திரம் பார்க்க வந்தார்களோ!
நெரிசலில் சிக்கி சின்னாபின்னமானர்கள்!
விரைந்து ஓடினேன் மருத்துவமனைக்கு,
ஒருபுறம் உறவுகளை தேடி அலறிய குரல்கள்,
மறுபுறம் வரிசை வரிசையாக வந்து குவிந்த சடலங்கள்,
மற்றொரு புறம் மருத்துவர்களும், செவிலியர்களும் சிலரின்
உயிர் போராட்டத்திற்கு உதவ, பதறியது உள்ளம்!
திடீரென “சார்... சார்... செத்துட்டான் சார்”
யாரோ ஒரு தந்தை,
இரண்டு வயது பிஞ்சை சடலமாக கையில் ஏந்தியபடி!
ஐயோ… தந்தையின் கண்ணீர் குழந்தையை நனைக்க
இதயமே வரண்டு பிளந்து கொண்டது.
யாரை குறை கூறி என்னை தேற்றிக்கொள்வேன்!
இறைவனை நோக்கி கட்டளையிட்டேன்
இனி இத்தகைய துயரங்கள் நிகழாதிருக்கட்டும்!
கண்ணீர் களந்த கட்டளை; கவனமா கேளுடா வெண்ண"
ஐயா...
பொது நிகழ்வுகளை நடத்தும் தலைவர்களே,
அனுமதி வழங்கும் அதிகாரிகளே,
ஓர் தாழ்மையான வேண்டுகோள்
இனி, அனாமத்தாக எந்த உயிரும் போகக்கூடாது!
குற்றம் புரிந்தவர் தான் யார்?
I STAND WITH WHOM?
பாதிக்கப்பட்டவனுக்கு தோல் கொடுக்க ஆள் இல்லையாம்
#I_stand_with_victims
ஆமாம்..! முன்னேறிய மாநிலமாமே தமிழ்நாடு?
-கணத்த இதயத்தோடு கரூர்காரன்!
கருத்துகள்