நீங்கள் வலதுசாரியா ? இடதுசரியா? அல்லது பொதுவானவரா?

 இந்தத் தலைப்பை கேட்டவுடன் சிலருக்கு வலதுசாரி, இடதுசாரியா அப்படி என்றால் என்ன? என்ற வியப்பு ஏற்படக் கூடும். எனவே, வலதுசாரி இடதுசாரி என்றால் என்ன என்பதை விளக்குவது அவசியமானது. இதுபோன்ற வார்த்தைகள் பொதுவாக இயக்கங்களில் துவங்கி பின்பு அரசியல் கட்சிகள் வரை பயன்படுத்தப்படும்.


இடதுசாரி என்றால் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், உரிமைகள், சீர்திருத்தம், முன்னேற்றம் போன்ற வார்த்தைகளை முன்னிறுத்தி அவற்றையே தங்களின் நோக்கமாக ஏற்றுக்கொண்டு செயல்படுபவை. அதேபோல், வலதுசாரி என்பது கலாச்சாரம், முப்பாட்டன், ஒழுக்கம், படிநிலை, பாரம்பரியம், கட்டுப்பாடு போன்ற வார்த்தைகளை முன்னிறுத்தி இயக்கங்களை நடத்தி வருபவை.

இப்போது எந்த வார்த்தைகளை முன்னிறுத்தி நாம் கருத்துகளை வைக்கிறோம் என்று உணர்ந்து, சிலர் நீங்கள் இடதுசாரியா அல்லது வலதுசாரியா என்று ஓர் முடிவுக்கு வந்திருப்பீர்கள். பலரோ எனக்கு இடதுசாரியும் தேவைப்படாது வலதுசாரியும் தேவைப்படாது நான் பொதுவான மனிதன், எனக்கும் இவற்றுக்கும் எவ்வித தொடர்பும் கிடையாது என்று சொல்லக்கூடும்.

“நமக்கு அரசியலெல்லாம் வேண்டாம், பிழைக்கின்ற வழியைப்பார்” என்று ஒரு பொறுப்புள்ள பெற்றோரிடம் அல்லது ஆசிரியரிடம் இருந்து   அறிவுரை வந்திருக்கும்.  அன்பின் வெளிப்பாடாக அவர்கள் அப்படி சொல்வது உண்மைதான். ஆனால் அரசியல் கட்சிகளுக்கும், நாம் இயல்பாக பேசும்போது நம்மைச் சுற்றி இயங்கிக்கொண்டிருக்கும் அரசியலுக்கும் வேறுபாடு இருக்கிறது.

அரசியல் என்பது நம் வாழ்வோடு கலந்தது, கட்சிகள் என்பது கருத்துகளையும், நோக்கங்களையும் வைத்து செயல்படும் ஓர் இயக்கம். நம் வாழ்வோடு கலந்த அரசியலில் நம்மால் ஈடுபடாமல் இருக்க முடியாது, நாம் வாழ்வது, உடுத்தும் உடை, இயல்பாக கூறும் கருத்துகள் என்று அனைத்தும் இங்கே அரசியல் தான்.

"அரசியலில் நீ தலையிடவில்லை என்றால் அரசியல் உன் வாழ்வில் தலையிடும்" என்று லெனினும். "அரசியலை நாம் தவிர்ப்போமானால், நம்மால் தவிர்க்க பட வேண்டியவர்கள் நம்மை ஆள நேரிடும்" என்று பிலாட்டோவும் கூறியிருக்கின்றனர்.

வாய்மையே இங்கு அரசியல் நமது கருத்துக்களே இங்கு அரசியல். ஆகவே அதில் சரியான எவருக்கும் தீங்கில்லாத அரசியலை நாம் பின்பற்றுவது அவசியமானது. யாருக்கும் தீங்கு ஏற்படக் கூடாது என்றால் நான் பொதுவானவராக இருப்பது தானே சரி என்று சிலர் கேட்கக்கூடும்.

ஒரு கதையில் உதைக்கிறவன் ஒருவன் உதைவாங்கி கொண்டிருப்பவன் ஒருவன், உதைப்பவன் ஆதிக்கம் செலுத்த உதைக்கிறான் என்று எடுத்து கொள்வோம். ஒரு பொதுவான மனிதராக நாம் உதைவாங்குபவன் பக்கமே நிற்க வேண்டும் அதுவே மனித நேயம். நான் இருவர் பக்கமும் இல்லை பொதுவானவன் என்று சொல்வதே ஆதிக்கம் செலுத்துபவன் பக்கம் நிர்பாதாகத்தான் அர்த்தம்.

தோழர் திருமாவளவன் கூற்றுப்படி ஆட்டுக்கும் குள்ளநரிக்கும் இடையிலான போரில் ஆட்டின் பக்கம் நிற்பதே அறம். எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைவருக்குமான அரசியலை நாம் முன்னெடுப்போம்.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

The Dark Web (YouTube Video Script)

அவனும் அவர்களும்

கவிதைகள்